பா.ரஞ்சித் – விக்ரம் மெகா கூட்டணி !

இயக்குனர் பா .ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் சார்பட்டா பரம்பரை .இந்த படத்தில் ஆர்யா , பசுபதி , ஜான் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர் . சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . திரை அரங்கில் வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படம் அமேசான் ஓடிடி -யில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது .

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து ஒரு படம் ரஞ்சித் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மகான் . இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் . பாபி சிம்ஹா , சிம்ரன் , துருவ் விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் .
மகான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது . மேலும் இந்த படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்க உள்ளதாகவும் அந்த படத்திற்கு மைதானம் என்ற தலைப்பை வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது .

ஜூலை மாதம் 15-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது . மிகப்பெரிய பட்ஜெட்டில் பீரியட் ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாக உள்ளது .மேலும் இந்த திரைப்படம் 3டி பதிப்பையும் கொண்டிருக்கும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .

Share.