கொரோனா பாதிப்பு… உயிருக்கு போராடும் நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர்!

சினிமாவில் பாப்புலர் நடன இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவசங்கர். இவர் தமிழ், தெலுங்கு உட்பட 10 மொழிகளில் நடன இயக்குநராக 800 படங்களுக்கு மேல் பணியாற்றியிருக்கிறார். ‘பூவே உனக்காக, வரலாறு, அருந்ததி, திருடா திருடி, பாகுபலி 1, விஷ்வ துளசி, உளியின் ஓசை’ போன்ற படங்கள் இவர் பணியாற்றியதில் மிக முக்கியமான படங்களாக அமைந்தது.

நடன இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் ‘பிஸ்கோத், தில்லுக்கு துட்டு 2, சர்கார், கஜினிகாந்த், தானா சேர்ந்த கூட்டம், சிவலிங்கா, அரண்மனை, தில்லு முல்லு, பரதேசி, வரலாறு’ போன்ற பல படங்களில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார் சிவசங்கர்.

தற்போது, நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், சிவசங்கரின் மகன் அஜய் கிருஷ்ணா மருத்துவ செலவுக்கு பண உதவி செய்யுமாறு கேட்டிருக்கிறார்.

Share.