கோப்ரா படத்தின் புதிய அப்டேட் !

2015-ஆம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி . இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்கிய படம் இமைக்கா நொடிகள் . நயன்தாரா , அதர்வா , அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படத்தை தொடர்ந்து கோப்ரா என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார் அஜய் ஞானமுத்து.

கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் நடித்து இருக்கிறார் . ஸ்ரீநிதி , மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர் . ஏ .ஆர் . ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் . இந்த படத்திலிருந்து வெளியான தும்பி , தும்பி பாடலும் அதீரா என்கிற பாடலும், சமீபத்தில் வெளியான உயிர் உருகுதே பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது . முன்னதாக இந்த படத்தின் டீசர் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியாகி இருந்தது . அதன் பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது .

இந்நிலையில் கோப்ரா படத்தின் ஆடியோ ரிலீஸ் ஜூலை 11-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு பிரபல மாலில் வெளியிட உள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ரகுமான் பாடல் பாடவுள்ளார் என்ற செய்தியும் வெளியாகி ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது .

Share.