கோப்ரா படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.

2015-ஆம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி . இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்கிய படம் இமைக்கா நொடிகள் . நயன்தாரா , அதர்வா , அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படத்தை தொடர்ந்து கோப்ரா என்கிற படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து.


கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார் . ஸ்ரீநிதி , மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர் . ஏ .ஆர் . ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் . இந்த படத்திலிருந்து வெளியான தும்பி , தும்பி பாடலும் அதீரா என்கிற பாடலும் நல்ல வரவேற்பை தந்தது . முன்னதாக இந்த படத்தின் டீசர் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியாகி இருந்தது . அதன் பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது .

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சில மாதங்களுக்கு முன்பு முடிந்தது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்பொழுது நடந்து வருகிறது . இந்நிலையில் கோப்ரா படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

இச்சூழலில் கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிறுவனம் வலிமை, பீஸ்ட், விக்ரம் படங்களை ரிலீஸ் செய்த நிறுவனம் ஆகும்.

Share.