விஜய் படத்தின் தலைப்பை கைப்பற்றிய இளம் இயக்குனர் !

2019-வது ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் கோமாளி . இந்த படத்தை இயக்கி இருந்தவர் அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் . காஜல் இந்த படத்தின் நாயகியாக நடித்து இருந்தார் . ஹிப் ஹாப் ஆதி இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் .யோகி பாபு , கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் .

கோமாளி படம் வெளியான பிறகு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . படத்தின் இயக்குனருக்கு தமிழ் சினிமாவில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது . இதனை தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யிடம் கதை சொல்லி உள்ளார் என்றும் ரஜினியிடம் கதை சொல்லி இருந்தார் என்ற தகவல் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் இவர் இயக்கும் படத்தில் இவரே நாயகனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது . எ.ஜி.எஸ் நிறுவனம் அந்த படத்தை தயாரிக்கிறது . யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் , இந்நிலையில் இந்த படத்திற்கு “லவ் டுடே ” என்று தலைப்பு வைத்துள்ளனர் . இந்த தலைப்பில் ஏற்கனவே நடிகர் விஜய் நடிப்பில் 1997- ஆம் படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.