அடேங்கப்பா… காமெடி நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ மூலம் ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கிய சந்தானத்தை காமெடியனாக வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தி அழகு பார்த்தவர் சிலம்பரசன். அந்த படம் தான் ‘மன்மதன்’.

அதன் பிறகு சந்தானத்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சச்சின், அன்பே ஆருயிரே, சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், சிறுத்தை, வானம், ஒரு கல் ஒரு கண்ணாடி, ராஜா ராணி’ என காமெடியனாக நடிக்க படங்கள் குவிந்தது. பின், கதையின் நாயகனாக வலம் வர ஆசைப்பட்ட சந்தானம் ‘அறை எண் 305-ல் கடவுள், கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு 1 & 2, சக்க போடு போடு ராஜா, A1, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா’ ஆகிய படங்களில் மாஸ் காட்டினார்.

சந்தானத்தின் புதிய படமான ‘சபாபதி’ கடந்த நவம்பர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் ஆர்.ஸ்ரீனிவாச ராவ் இயக்கியிருந்தார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ப்ரீத்தி வர்மா டூயட் பாடி ஆடியிருந்தார். இப்போது சந்தானம் நடிப்பில் ‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு ரூ.80 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.