அடேங்கப்பா… காமெடி நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

‘என் தங்கை கல்யாணி’ படத்தில் சின்ன ரோலில் அறிமுகமான வடிவேலு, அதன் பிறகு ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ‘என் ராசாவின் மனசிலே’ படத்துக்கு பிறகு வடிவேலுவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.

காமெடியனாக வலம் வந்த வடிவேலுவை ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன், தெனாலிராமன், எலி’ ஆகிய படங்களில் ஹீரோவாகவும் அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. தற்போது, வடிவேலு ஹீரோவாக நடிக்கும் புதிய படமான ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’-ஐ இயக்குநர் சுராஜ் இயக்குகிறார். இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு ரூ.130 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.