அடேங்கப்பா… காமெடி நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இப்போதெல்லாம் ‘காமெடி’ என்று சொன்னாலே யோகி பாபுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் யோகி பாபு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

டைமிங் காமெடி மற்றும் டயலாக் மாடுலேஷன் தான் யோகி பாபுவின் ஸ்பெஷல். இப்போது, யோகி பாபு நடிப்பில் ‘வலிமை, பீஸ்ட், பன்னி குட்டி, அயலான், சலூன், கடைசி விவசாயி, பொம்மை நாயகி’ என பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘பொம்மை நாயகி’ படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்தை ஷான் இயக்க, சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்து வருகிறார், அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், செல்வா ஆர்.கே படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு (2020) மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் யோகி பாபு. சமீபத்தில், யோகி பாபு – மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு ரூ.40 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.