வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’… முக்கிய ரோலில் நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ நடிகை!

‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

சமீபத்தில், புதிய காமெடி படத்துக்காக நடிகர் வடிவேலுவும் – இயக்குநர் சுராஜும் மீண்டும் கூட்டணி அமைக்கப்போகின்றனர் என்றும், இதற்கு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என டைட்டில் சூட்டப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறாராம்.

கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி வெளியான மோஷன் போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. தற்போது, படத்துக்கான பூஜை போடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் முக்கிய ரோல்களில் ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி, முனிஷ்காந்த், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிக்கவுள்ளனராம்.


Share.