“முன்னணி ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன்”… ஓவராக சீன் போடும் ‘குக் வித் கோமாளி’ நடிகை!

திரைப்படங்களில் நடித்து ஃபேமஸாவதற்கு முன்பே தனக்கு இருந்த தனி திறமையால் கவனம் ஈர்த்தவர் தான் அந்த நடிகை. இவர் பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பான பாட்டு நிகழ்ச்சி மூலம் ஃபேமஸானார். அடுத்ததாக அதே டிவி சேனலில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டதால், மீண்டும் அந்த சமையல் நிகழ்ச்சியின் சீசன் 2-விலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சமையல் நிகழ்ச்சி மூலம் அவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இதனால் இவருக்கு வெள்ளித்திரையில் நடிகையாக அவதாரம் எடுக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இப்போது ‘சி’ நடிகரின் படத்திலும், ‘உ’ நடிகரின் படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார். இதனால் விளம்பர படங்களில் நடிக்க இவரை அணுகினால் அதிக சம்பளம் கேட்கிறாராம். மேலும், டாப் ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன். அதுவும் டாப் இயக்குநர்களின் படங்கள் என்றால் மட்டுமே, அவர்களிடம் கதை கேட்பேன் என்று ஓவராக சீன் போடுகிறாராம் அந்த நடிகை.

Share.