குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்கள் சினிமாவில் நடிக்கின்றனர்.

இதில் பிரபலமான ஷிவாங்கி என்பவர் சிவகார்த்திகேயன் உடன் டான் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் பவித்ரா ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தில் காமெடியன் சதீஷூக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அந்த வரிசையில் தற்போது அஸ்வினும் இணைந்துள்ளார். அறிமுக இயக்குநர் ஹரி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என டைட்டில் வைத்துள்ளனர். இது அஜித்தின் சூப்பர் ஹிட் பாடலின் வரியாகும். (படம் கண்டுக் கொண்டேன் கண்டுக் கொண்டேன்)

இந்த படத்தில் புகழ் காமெடி கேரக்டரில் நடிக்க இருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.

Share.