‘குக் வித் கோமாளி’ புகழின் காதலி இவர்தானா?… தீயாய் பரவும் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மூலம் அதிக கவனம் ஈர்த்தவர் புகழ். இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு பிறகு புகழின் கால்ஷீட் டைரியில் தொடர்ந்து படங்கள் குவிந்த வண்ணமிருக்கிறது.

சமீபத்தில், இவர் நடித்த ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ அஷ்வின் தான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கியிருந்தார். இதில் அஷ்வினுக்கு ஜோடியாக தேஜூ அஷ்வினி, அவந்திகா மிஸ்ரா என டபுள் ஹீரோயின்ஸ் நடித்திருந்தனர்.

இப்போது ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிப்பில் அஜித்தின் ‘வலிமை’, விஜய் சேதுபதி – பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படம், அருண் விஜய்யின் ‘யானை’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, சசிக்குமாரின் புதிய படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கும் ஸ்டில்லை ஷேரிட்டு, “ஹேப்பி பர்த்டே பார்ட்னர், லவ் யூ” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஸ்டில் மற்றும் ஸ்டேட்டஸை பார்த்த ரசிகர்களுக்கு இந்த பெண் புகழின் லவ்வரா? வருங்கால மனைவியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share.