காதலியை கரம் பிடித்த ‘குக் வித் கோமாளி’ புகழ்… வைரலாகும் வீடியோஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மூலம் அதிக கவனம் ஈர்த்தவர் புகழ். இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு பிறகு புகழின் கால்ஷீட் டைரியில் தொடர்ந்து படங்கள் குவிந்த வண்ணமிருக்கிறது.

சமீபத்தில், இவர் நடித்த அஷ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, அஜித்தின் ‘வலிமை’, அருண் விஜய்யின் ‘யானை’ ஆகிய படங்கள் ரிலீஸானது.

இப்போது ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிப்பில் விஜய் சேதுபதி – பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படம், ‘காசேதான் கடவுளடா, ஏஜென்ட் கண்ணாயிரம்’ உட்பட ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 1-ஆம் தேதி) நடிகர் புகழ் தனது நீண்ட நாள் காதலி பென்ஸ் ரியாவை திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இவரின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

 

Share.