கே.ஜி.எஃப் படத்திற்கு எதிரான வழக்கு !

நடிகர் யஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம் கே.ஜி.எஃப் 1 . இந்த படத்தை தமிழில் நடிகர் விஷால் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டார் . தமிழ் , ஹிந்தி ,மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் வெளியானது . யாரும் எதிர்பார்த்திராத வகையில் இந்த படம் மிக பெரிய வெற்றியை குவித்தது . இதன் பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு இந்திய முழுவதும் அதிகரித்தது .

இந்த நிலையில் சுமார் மூன்று வருடம் கழித்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டும் வெளியானது . கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி உலக முழுவதும் வெளியான இந்த படம் இந்திய முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது . தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது .

கே.ஜி.எஃப் 2 படம் இன்னும் சில திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது .இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோ யஷ் புகைப்பிடித்தலை ஊக்குவிக்கும் வகையிலும், புகைப்பிடித்தல் ஆரோக்கியமான சமூக பழக்கம் என்றும், புகைப்பிடித்தல் ஒரு ஸ்டைல் என்பது போலவும், நடித்துள்ளார். எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று கர்நாட மாநில உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் படத்தை தடை செய்ய முடியாது என்று கூறி மனுவை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்தது.

Share.