இரண்டாவது திருமணம் செய்துக்கொண்ட இசையமைப்பாளர் !

இசையமைப்பாளர் D. இமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் கிருஷ்ணா தாசி ,சிகரம் ,கோலங்கள் , அகல்யா ,கல்கி , கலசம் , திருமதி செல்வம் , உறவுகள் என சின்னத்திரை தொடர்களுக்கு இசையமைத்து உள்ளார். காதலே சுவாசமே என்கிற படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இந்த படத்திலிருந்து பாடல்கள் வெளியானது ஆனால் படம் வெளியாகவில்லை . இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவான தமிழன் என்கிற என்ற படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இந்த படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தது .

இதன் பிறகு இவர் பல படங்களுக்கு இசையமைத்து வந்தாலும் 2012 -ஆம் வெளியான கும்கி படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடனும் , இயக்குனர்களுடனும் பணியாற்ற தொடங்கினர்.

D. இமான் 2008-ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் . இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் D. இமான் மற்றும் மோனிகா ரிச்சர்ட் இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . இவர்களது விவாகரத்து செய்தி பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது .

இந்நிலையில் D. இமான் தற்பொழுது அடுத்த திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று D. இமானின் இரண்டாவது திருமணம் நேற்று நடைபெற்றது .தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த கலை இயக்குனர் உபால்டுவின் மகள் அமலியை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணம் செய்துள்ளார் .நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.

Share.