பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இறந்து கிடந்த நபர்… போலீசார் விசாரணை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி ரிலீஸானது. ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் 67-வது படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.

பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் பிரபாகரன் என்பவர் கடந்த ஒரு மாதமாகவே பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கடந்த வாரம் மது அருந்திவிட்டு விஜய்யின் அலுவலகத்திலேயே இரவு தங்கியிருக்கிறார். மேலும், அங்கிருந்த ஒரு மேஸ்திரியிடம் பரோட்டா சாப்பிடுவதற்காக ரூ.100-வும் கேட்டு வாங்கியிருக்கிறார் பிரபாகரன்.

அதன் பிறகு அடுத்த நாள் காலை அங்கு பணிபுரிபவர்கள் சென்றபோது, பிரபாகரன் இறந்து கிடந்ததை பார்த்து ஷாக்காகியுள்ளனர். பின், அங்கு வந்து விசாரித்த காவல் துறையினர் பிரபாகரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபாகரன் மது அருந்திவிட்டு பரோட்டாவும் சாப்பிட்டதால் மூச்சு குழாயில் அடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

Share.