தேஜாவு படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

தேஜாவு படம் 2022 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி மர்மத் திரில்லர் திரைப்படமாகும். இது அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசனால் இயக்கப்பட்டது மற்றும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பாக கே. விஜய் பாண்டி தயாரித்துள்ளார் மற்றும் பிஜி மீடியா ஒர்க்ஸ் பேனரின் கீழ் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க, ஸ்ம்ருதி வெங்கட், மது, அச்யுத் குமார், காளி வெங்கட், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவை பி.ஜி.முத்தையாவும், எடிட்டிங்கை அருள் ஈ சித்தார்த் செய்ய, ஜிப்ரான் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

நவம்பர் 2020 இல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது ஆனால் கோவிட் இரண்டாம் அலை காரணமாக, படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 2021 இல் நிறைவடைந்தது. இந்த படத்தில் அருள்நிதி போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார் .

படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு, எம். சசிகுமார் தனது ட்விட்டர் கணக்கில் 21 ஜூலை 2021 அன்று வெளியிட்டனர். ஜனவரி 2022 இல், படத்தின் டீசரை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு இருந்தனர் .

இந்நிலையில் ஜூலை 22-ஆம் தேதி இந்த படம் திரையரங்கில் வெளியானது . இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தற்போது இந்த படம் 5 நாளில் 2.16 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

Share.