“தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்யவில்லை”… விளக்கமளித்த இயக்குநர் கஸ்தூரி ராஜா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன், சேகர் கம்முலா படங்கள் மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 10 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

2004-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ், முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா ‘3, வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 17-ஆம் தேதி இரவு நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தனர். ஆகையால், இவர்கள் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக செய்திகள் பரவியது. இச்செய்தி ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது, இது தொடர்பாக தனுஷின் அப்பாவும், பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் பிரியப்போவதாக அறிவித்துள்ளனர். ஆனால், அவர்களின் அறிக்கையில் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக குறிப்பிடவே இல்லை. இப்போது தனுஷ் – ஐஸ்வர்யா இருவருமே ஹைதராபாத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் போனில் பேசுகையில் சில அறிவுரை வழங்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Share.