தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். 2004-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ், முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.
ஐஸ்வர்யா ‘3, வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தற்போது, நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளனர்.
தனுஷ் நடிப்பில் இப்போது தமிழில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன், சேகர் கம்முலா படங்கள் மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 10 படங்கள் லைன் அப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/hAPu2aPp4n
— Dhanush (@dhanushkraja) January 17, 2022
Comments