தனுஷ் – அக்ஷய் குமார் நடிக்கும் ‘அட்ராங்கி ரே’… வெளியான செம்ம மாஸ் தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன்’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், செல்வராகவன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள் மற்றும் ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ என எட்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் கார்த்திக் சுப்புராஜின் ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ஆனந்த்.எல்.ராயின் ‘அட்ராங்கி ரே’ படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது.

இந்நிலையில், இந்த படத்தின் 2-ஆம் ஷெடியூல் ஷூட்டிங்கை மதுரையில் இன்று (அக்டோபர் 5-ஆம் தேதி) முதல் ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 15 நாட்களுக்கு நடைபெறப்போகும் இந்த ஷெடியூலில் தனுஷும் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. தனுஷ் – அக்ஷய் குமார் இணைந்து நடிக்கும் இதில் ஹீரோயினாக சாரா அலிகான் நடித்து கொண்டிருக்கிறார்.

Share.