தனுஷ் – செல்வராகவன் காம்போ… படத்தின் டைட்டில் & ரிலீஸ் அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன்’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், செல்வராகவன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் செல்வராகவன் – தனுஷ் காம்போவில் தயாராகும் படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் பார்ட் 2 (A02) என தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இப்படத்தின் இயக்குநர் செல்வராகவனும், தனுஷும் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

2010-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ முதல் பாகத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது வந்திருக்கும் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பால் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் செல்வராகவனின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர். இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகளே ஒரு வருடத்திற்கு நடைபெறுமாம். படத்தை 2024-ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.