இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ் – செல்வராகவன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் கஸ்தூரி ராஜா. இவர் ‘என் ராசாவின் மனசிலே, ஆத்தா உன் கோயிலிலே, சோலையம்மா, நாட்டுப்புறப்பாட்டு, எட்டுப்பட்டி ராசா, வீரத்தாலாட்டு, என் ஆச ராசாவே, கும்மிப் பாட்டு, கரிசக்காட்டுப் பூவே, துள்ளுவதோ இளமை’ போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.

கஸ்தூரி ராஜாவின் மகன்களான செல்வராகவனும், தனுஷும் தமிழ் சினிமாவில் இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும் வலம் வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர்’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், சேகர் கம்முலா படங்கள் என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘நானே வருவேன்’ படத்தை செல்வராகவனே இயக்கி, மிக முக்கிய ரோலில் நடிக்கவும் செய்கிறார். மிக விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷும், செல்வராகவனும் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை செல்வராகவனின் மனைவியும், பிரபல இயக்குநருமான கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்ததுடன், கஸ்தூரி ராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த ஸ்டில்ஸையும் வெளியிட்டுள்ளார்.

Share.