சினேகாவின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட தனுஷ்… வைரலாகும் வீடியோ!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சினேகா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே மாதவனுடன் தான். அது தான் ‘என்னவளே’. இந்த படத்தை இயக்குநர் ஜே.சுரேஷ் இயக்கியிருந்தார். ‘என்னவளே’ படத்துக்கு பிறகு நடிகை சினேகாவிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, விரும்புகிறேன், கிங், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, வசூல் ராஜா MBBS, பார்த்திபன் கனவு, ஆட்டோகிராஃப், புதுப்பேட்டை, நான் அவன் இல்லை, பிரிவோம் சந்திப்போம், கோவா, உன் சமையல் அறையில், வேலைக்காரன், பட்டாஸ்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

2012-ஆம் ஆண்டு பாப்புலர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சினேகா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இப்போது, சினேகா ‘ஷாட் பூட் 3’ என்ற தமிழ் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், இன்று (அக்டோபர் 12-ஆம் தேதி) சினேகாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, நேற்று இரவு இவரின் பர்த்டே கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோஸ் மற்றும் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

Share.