மிக விரைவில் திருமணமாகவிருந்த நிலையில் தனுஷ் பட நடிகை எடுத்த அதிரடி முடிவு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மெஹ்ரீன் பிர்சடா. இவர் அறிமுகமான முதல் தெலுங்கு படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கிருஷ்ணா காடி வீர பிரேம காதா’. இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கிய இந்த படத்தில் ஹீரோவாக நானி நடித்திருந்தார்.

‘கிருஷ்ணா காடி வீர பிரேம காதா’ படத்துக்கு பிறகு நடிகை மெஹ்ரீனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மகானுபவுடு, ராஜா தி கிரேட், ஜவான், பந்தம், கவச்சம், F2 : Fun and Frustration, சாணக்யா, என்த மஞ்சிவாடவுரா, அஷ்வதாமா’ என தெலுங்கு படங்கள் குவிந்தது. ‘நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ்’ போன்ற படங்களில் மெஹ்ரீனை நடிக்க வைத்து தமிழ் சினிமாவும் அழகு பார்த்தது.

மெஹ்ரீன் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் பஞ்சாபி, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது ‘F3’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் மெஹ்ரீன். சமீபத்தில், நடிகை மெஹ்ரீன் பிர்சடாவுக்கும், ஹரியானா மாநிலத்தின் அதம்பூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏவின் மகன் பாவ்யா பிஷ்னோய்க்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மிக விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவிருந்தது.

Dhanush Film Actress Mehreen Calls Off Her Wedding1

தற்போது, மெஹ்ரீன் ட்விட்டரில் “நானும் பாவ்யா பிஷ்னோய்யும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்துள்ளோம். ஏற்கனவே நாங்கள் இருவரும் மிக விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்திருந்தோம். இப்போது இந்த அறிக்கையின் மூலம் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் பாவ்யா பிஷ்னோய்யுடனும், அவரது குடும்பத்தினருடனும் எந்த தொடர்பும் நான் வைத்துக் கொள்ளப்போவதில்லை” என்று கூறியுள்ளார்.

Share.