விரைவில் ‘தி க்ரே மேன்’ படத்தின் டிரைலர் !

நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக 2002-ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார் . இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் . இவரது ஆரம்ப காலகட்டத்தில் இவரை பலர் விமிர்சித்தார்கள் . அவர் ஒல்லியாக இருப்பதை பலர் கிண்டலடித்தனர் .ஆனால் நடிகர் தனுஷ் தனது நடிப்பின் மூலம் அவர்களுக்கு பதில் அளிக்க தொடங்கினார். பொல்லாதவன் , திருவிளையாடல் ஆரம்பம் , யாரடி நீ மோகினி , ஆடுகளம் , என தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார் . தமிழ் சினிமா மட்டுமில்லமல் , பாலிவுட் சினிமாவிலும் இவர் படங்களுக்கு வரவேற்பு இருந்தது . மேலும் பாடகர் , பாடலாசிரியர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என்று தன்னை மெருகேத்திக்கொண்டே இருக்கிறார் .

கோலிவுட் மற்றும் பாலிவுட் பட உலகில் வெற்றி பெற்று வந்த நடிகர் தனுஷ் தற்பொழுது ஹொலிவூட் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார் அந்த வகையில் அந்தோ ரோஸ் மற்றும் ஜோ ரோஸ் இயக்கி உள்ள
க்ரே மேன் என்கிற படத்தில் தனுஷ் நடித்துள்ளார் . நெட்ஃபிளிக்சு ஓ.டி.டி-யில் இந்த படம் வெளியாக இருக்கிறது. 200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி இருக்கிறது .

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என்றும் படம் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள் . நடிகர் தனுஷ இதை தனது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை . இதனால் தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு வைத்துள்ளனர் .

Share.