மீண்டும் களத்தில் தனுஷ் !

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர் . இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் மாறன். இந்த படம் ஓ.டி.டியில் வெளியாகி மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார் .

குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற கதையில் நடித்து முடித்துள்ளார் தனுஷ் . தற்போது வாத்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ் . மேலும்
திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவது , பாடுவது என பல துறைகளிலும் அசத்தி வருகிறார் தனுஷ் . அந்த வகையில் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார் .

சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலா , மாரி 2 போன்ற படங்களுக்கு பிறகு பட தயாரிப்பிற்கு பிறகு சில வருடங்கள் பட தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தார் தனுஷ் . இந்நிலையில் தற்போது மீண்டும் அடுத்தடுத்து பல படங்களை தனுஷ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் மற்றும் மாரி செல்வராஜுடன் தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களும் வெற்றிமாறனுடன் இணைந்து ஒரு படமும் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் மீண்டும் தனுஷ் தயாரிப்பாளராக கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Share.