ஜி.வி.பிரகாஷ் குமாருக்காக அந்த விஷயத்தை செய்த நடிகர் தனுஷ்!

தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இசையமைப்பாளராக டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், 2015-ஆம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அதுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டாக, ஜி.வி.பிரகாஷின் கால்ஷீட் டைரியில் நடிக்கவும் ஆஃபர்கள் குவிந்தது.

இப்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ‘பிகில்’ படம் மூலம் ஃபேமஸான நடிகை அம்ரிதா ஐயர் டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், முக்கிய ரோல்களில் ஆனந்த ராஜ், ரேஷ்மா, டேனியல் அன்னி போப் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். சமீபத்தில், இதன் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸை நடிகை ரேஷ்மா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. தற்போது, இந்த படத்தின் ‘டாட்டா பை பை’ என்ற பாடலை டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷ் பாடியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தை நேரடியாக சன் டிவியில் வருகிற தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக ஏப்ரல் 14-ஆம் தேதி ஒளிபரப்ப ப்ளான் போட்டுள்ளனர்.

Share.