மூன்றாவது முறையாக இணையும் மாஸ் கூட்டணி… ஹேப்பி மோடில் தனுஷின் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘கர்ணன்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதியும், ‘அட்ராங்கி ரே’ ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய தமிழ் படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலாஜி மோகன் இயக்க உள்ளாராம்.

ஏற்கனவே, இவர்கள் காம்போவில் ‘மாரி’ 1 & 2 என இரண்டு மாஸ் படங்கள் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இதே கூட்டணி கைகோர்த்திருப்பதால் தனுஷின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். இதன் ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.

Share.