வெளியானது செம மாஸான தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ டீசர்… ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ரிலீஸுக்காக தனுஷின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில், இப்படம் வருகிற ஜூன் மாதம் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இது தொடர்பாக தனுஷ் ட்விட்டரில் “தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் என்னுடைய ரசிகர்களை போல நானும் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை இன்று (பிப்ரவரி 22-ஆம் தேதி) ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. மேலும், படம் ‘நெட்ஃப்ளிக்ஸ்’யில் தான் ரிலீஸாகப்போகிறது என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. வெகு விரைவில் இதன் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர்.

1

2

Share.