தனுஷ் – கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மாறன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன், சேகர் கம்முலா படங்கள் மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 10 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் கார்த்திக் நரேன் – தனுஷ் காம்போவில் உருவாகியுள்ள படம் ‘மாறன்’. இந்த படம் நேற்று (மார்ச் 11-ஆம் தேதி) மாலை 5 மணிக்கு பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’-யில் ரிலீஸானது. ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட், கிருஷ்ணகுமார், மகேந்திரன், ராம்கி ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படத்தை ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.