தனுஷின் ‘மாறன்’ டீசர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில்  தமிழில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, மாறன், திருச்சிற்றம்பலம்’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், சேகர் கம்முலா படம் (தெலுங்கு / தமிழ் / ஹிந்தி), ‘வாத்தி’ (தமிழ் / தெலுங்கு), ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 11 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் கார்த்திக் நரேன் – தனுஷ் காம்போவில் தயாராகும் ‘மாறன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸானது. இப்போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட், கிருஷ்ண குமார், மகேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இந்த படத்துக்கு பாப்புலர் பாடலாசிரியர் விவேக் – பாப்புலர் மலையாள எழுத்தாளர்கள் ஷர்ஃபு – சுஹாஸ் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர். தற்போது, இந்த படத்தின் புதிய ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது. படத்தின் டீசரை வருகிற பொங்கலுக்கும், படத்தை ஜனவரி மாதம் இறுதியிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.