தனுஷ் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘நானே வருவேன்’ படத்தின் ‘வீரா சூரா’ பாடல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, கேப்டன் மில்லர், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், சேகர் கம்முலா படங்கள் என 7 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் செல்வராகவன் – தனுஷ் காம்போவில் தயாராகும் ‘நானே வருவேன்’ படத்தின் போஸ்டர்ஸ் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து வருகிறாராம்.

படத்தை வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் செய்ய பிளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று படத்தின் ‘வீரா சூரா’ பாடலை ரிலீஸ் செய்துள்ளனர்.

Share.