தனுஷுடன் கூட்டணி அமைக்கும் இளம் இயக்குநர்… குஷியான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ராயன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், சேகர் கம்முலா படம் (தெலுங்கு / தமிழ் / ஹிந்தி), ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 11 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

தற்போது, தனுஷ் ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் படத்தின் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் ‘ராயன்’ படத்தின் ஷூட்டிங்கில் வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி கலந்து கொள்ள ப்ளான் போட்டுள்ளார் தனுஷ்.

இந்நிலையில், தனுஷ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய தமிழ் படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் இளன் இயக்க உள்ளாராம். இதனை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். மிக விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.