தனுஷ் – செல்வராகவன் காம்போவில் வெளியாகி ஹிட்டான ‘புதுப்பேட்டை’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, திருச்சிற்றம்பலம், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன், சேகர் கம்முலா படங்கள் மற்றும் ஹாலிவுட்டில் ‘தி கிரே மேன்’ என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘புதுப்பேட்டை’. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் இதனை இயக்கியிருந்தார். இதில் தனுஷ் ‘கொக்கி குமார்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் சோனியா அகர்வால், அழகம் பெருமாள் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.13.15 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Share.