அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… தனுஷின் ரீல் அம்மாவும் ஒரு போட்டியாளராமே!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5-க்கான பணிகள் துவங்கப்பட்டது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இப்போது, சீசன் 5-க்கான ‘பிக் பாஸ்’ வீட்டின் செட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 31-ஆம் தேதி) இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியை வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க விஜய் டிவி ப்ளான் போட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை வடிவுக்கரசி கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள வடிவுக்கரசி, கடைசியாக ‘ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷுக்கு அம்மாவாக வலம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.