அடேங்கப்பா… ‘வடசென்னை’ படத்தில் நடிப்பதற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். 2002-ஆம் ஆண்டு தான் இயக்கிய ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தன் மகன் தனுஷை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார் கஸ்தூரி ராஜா. இந்த படத்துக்கு பிரபல இயக்குநரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் தான் திரைக்கதை எழுதியிருந்தார்.

இந்த படம் ஹிட்டானதும், செல்வராகவனே தனுஷை வைத்து ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தினை இயக்கினார். இதுவும் வெற்றி பெற்றவுடன், தனுஷ் நடித்த படம் ‘திருடா திருடி’. சுப்ரமணியம் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் இடம்பெற்ற ‘மன்மத ராசா’ என்ற பாடலுக்கு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்பாடலுக்காகவே அப்படம் மெகா ஹிட்டானது.

அதன் பிறகு தனுஷுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வடசென்னை’. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இதனை இயக்கியிருந்தார்.

இதில் தனுஷ் ‘அன்பு’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, அமீர், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, தனுஷ் ‘வடசென்னை’-க்காக ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.