‘சிவசாமி’ கேரக்டரை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி… தனுஷ் வெளியிட்ட அறிக்கை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

நேற்று (மார்ச் 22-ஆம் தேதி) மாலை நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது ‘அசுரன்’ படத்தில் நடித்ததற்காக என அறிவிக்கப்பட்டது. மேலும், சிறந்த படத்துக்கான விருதும் ‘அசுரன்’ படத்துக்கு என அறிவிக்கப்பட்டது. இதனால் இப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் ஹீரோ தனுஷின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

தற்போது, இது தொடர்பாக நடிகர் தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அசுரன் படத்தில் ‘சிவசாமி’ என்ற கேரக்டரை எனக்கு கொடுத்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி. மற்றும் ‘அசுரன்’ படத்தின் தயாரிப்பாளர், என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள், நடிகைகள், இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி” என்று கூறியுள்ளார்.

Share.