தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படமான ‘தி க்ரே மேன்’… அசத்தலான அப்டேட் கொடுத்த ருஸ்ஸோ பிரதர்ஸ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ராயன், மாறன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், சேகர் கம்முலா படம் (தெலுங்கு / தமிழ் / ஹிந்தி), ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 11 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘தி க்ரே மேன்’ (The Gray Man) படத்தை ‘அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர்கள் அந்தோணி ருஸ்ஸோ – ஜோ ருஸ்ஸோ இணைந்து இயக்கி வருகின்றனர். இப்படத்தில் ரையன் கோஸ்லிங், க்ரிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், ஜெஸிக்கா ஹென்விக், வாக்னர் மௌரா, ஜூலியா பட்டர்ஸ், ஐஸ்வர்யா சோனார் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதில் மிக முக்கிய ரோலில் தனுஷ் நடித்து வருகிறாராம். ‘தி க்ரே மேன்’ என்ற பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. தற்போது, ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.