தனுஷ் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘தாய் கிழவி’ பாடல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, திருச்சிற்றம்பலம், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன், சேகர் கம்முலா படங்கள் மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை இயக்குநர் மித்ரன்.ஆர்.ஜவஹர் இயக்கி வருகிறார். இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர் என மூன்று ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மற்றும் பாப்புலர் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ‘தாய் கிழவி’ என்ற பாடலை இன்று ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.