அடேங்கப்பா… ‘வாத்தி’ பட ஹீரோயின் சம்யுக்தா மேனனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சம்யுக்தா மேனன். இவருக்கு அமைந்த முதல் படமே மலையாளத்தில் தான். அது தான் ‘பாப்கார்ன்’. இந்த படத்துக்கு பிறகு ‘தீவண்டி, லில்லி, கல்கி, ஆணும் பெண்ணும்’ என பல மலையாள படங்களில் நடித்தார்.

மலையாள மொழி மட்டுமில்லாமல் தமிழில் ‘களரி, ஜூலை காற்றில்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறார் சம்யுக்தா மேனன். சமீபத்தில், இவர் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். ‘வாத்தி’ (தெலுங்கு வெர்ஷன் – ‘SIR’) என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறாராம்.

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகுகிறதாம். இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை சம்யுக்தா மேனனின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.