தனுஷ் நடிக்கும் வாத்தி படம் எப்பொழுது திரைக்கு வரும் ?

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை சென்று தமிழ் நடிகனாக அசத்தி இருக்கிறார். நடிகர் தனுஷ் தற்பொழுது வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார் . சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

நடிகர் தனுஷ் தற்பொழுது நடித்து முடித்துள்ள படம் நானே வருவேன் . இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி உள்ளார் . கதை மற்றும் திரைக்கதையை நடிகர் தனுஷ் எழுதி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார். கலைப்புலி.எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார் .

இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது வாத்தி படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி இயக்குகிறார். ஜி. வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் வாத்தி படத்தை டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்து உள்ளதாக தகவல் வந்துள்ளது . மேலும் வாத்தி திரைப்படத்தை தமிழகத்தில் அன்புச்செழியன் வெளியிடுகிறார் என்ற தகவலும் வெளியிடுகிறார் .

Share.