மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்!

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர ஆட்டக்காரரும் , இந்திய சினிமாவின் முன்னாள் கேப்டனும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி கிரிக்கெட் துறையில் பல சாதனை செய்துள்ளார் .நடிகர் தோனி கிரிக்கெட்டை தவிர சினிமா மீது ஆர்வம் உடையவராக திகழ்கிறார் . இந்நிலையில் எம்.எஸ்.தோனி திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார் . அதற்காக தனி தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி உள்ளார் . இந்த நிலையில் எம்.எஸ்.தோனி தமிழில் புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி இருந்தது . அதில் நயன்தாராவை நடிக்க வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது .

நயன்தாரா தற்பொழுது அட்லீ இயக்கும் படம் ஒன்றில் நடித்து வருகிறார் . தோனி தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில்
நடிகர் ரஜினிகாந்திடம் முக்கிய உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைத்துள்ளார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது .

அவர் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பில் எம்.எஸ்.தோனி தமிழகத்தில் ஈடுபட இருக்கிறார் எனக் கூறப்பட்டது ஆனால் இந்த செய்தியை மறுத்து தோனியின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளது .

Share.