பிரபல தெலுங்கு நடிகையை ரகசிய திருமணம் செய்து கொண்டாரா இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்?

சினிமாவில் பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் ‘சச்சின், மழை, உனக்கும் எனக்கும், சிங்கம், வீரம், புலி, சாமி ஸ்கொயர்’ போன்ற பல தமிழ் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். கடைசியாக இவர் இசையில் வெளியான படம் ‘தி வாரியர்’.

இப்போது சூர்யாவின் 42-வது படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிவா இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பிரபல தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னாடாவுடன் டேட்டிங் சென்று வருவதாகவும், இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாகவும் தண்டோரா போடப்பட்டு வருகிறது. தற்போது, இது தொடர்பாக நடிகை பூஜிதா பொன்னாடா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “பரவி வரும் இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளார்.

Share.