வாரிசு பட தயாரிப்பாளரின் மாஸ்டர் பிளான் !

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது . இந்த படத்திற்கு வாரிசு என்று தலைப்பு வைத்துள்ளனர் .இந்நிலையில் வாரிசு படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து வருகிறது.


இந்நிலையில் வாரிசு படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் தில்.ராஜூ தான் ஷங்கர் மற்றும் ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தை தயாரிக்கிறார் எனவே இந்த இரண்டு படத்தின் வெளிநாட்டு உரிமத்தை 60கோடி ரூபாய்க்கு விற்று விடலாம் என்ற திட்டத்தை வகுத்துள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜூ. இவரின் இந்த திட்டம் பலிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

Share.