கே.ஜி.எஃப் 2 படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் !

நடிகர் யஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம் கே.ஜி.எஃப் 1 . இந்த படத்தை தமிழில் நடிகர் விஷால் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டார் . தமிழ் , ஹிந்தி ,மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் வெளியானது . யாரும் எதிர்பார்த்திராத வகையில் இந்த படம் மிக பெரிய வெற்றியை குவித்தது . இதன் பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு இந்திய முழுவதும் அதிகரித்தது .

இந்த நிலையில் சுமார் மூன்று வருடம் கழித்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டும் வெளியானது . கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி உலக முழுவதும் வெளியான இந்த படம் இந்திய முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது . படம் பார்த்த அனைவரும் இந்த படத்தை சமூக வலைத்தளங்களில் இன்னும் கொண்டாடி வருகின்றனர் . சினிமா நட்சத்திரங்களும் படக்குழுவை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர் .

அந்த வகையில் இந்திய சினிமாவின்‌ முன்னணி இயக்குனரான இயக்குனர் ஷங்கர் கே.ஜி.எஃப் 2 படத்தை பாரத்துவிட்டு படக்குழுவை பாராட்டி உள்ளார். நடிகர் யாஷ் , இயக்குனர் பிரஷாந்த் நீல் ,சண்டை மாஸ்டர் அன்பறிவு , என‌அனைவரையுய் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Share.