மகனின் முதல் பர்த்டேவை கொண்டாடி மகிழ்ந்த இயக்குநர் ஏ.எல்.விஜய்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.எல்.விஜய். இவர் இயக்கிய முதல் படத்திலேயே ஹீரோவாக ‘தல’ அஜித் தான் நடித்திருந்தார். அது தான் ‘கிரீடம்’. இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷாவும், மிக முக்கிய ரோலில் ராஜ்கிரணும் நடித்திருந்தனர். ‘கிரீடம்’ படத்துக்கு பிறகு இயக்குநர் ஏ.எல்.விஜய்-க்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து ‘பொய் சொல்ல போறோம், மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், இது என்ன மாயம், தேவி 1 & 2, வனமகன், தியா, வாட்ச்மேன்’ என பல படங்கள் இயக்கும் வாய்ப்பு குவிந்தது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் புது படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக்கான இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில், இதன் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் முடிவடைந்தது. 2014-ஆம் ஆண்டு நடிகை அமலா பாலை திருமணம் செய்து கொண்டார் ஏ.எல்.விஜய். பின், அமலா பாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் ஏ.எல்.விஜய். அதன் பிறகு 2019-ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் ஏ.எல்.விஜய். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது, இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் மகன் துருவா விஜய்யின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

1

2

3

4

 

Share.