இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த சூர்யா!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் பாலா இயக்கும் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாடிவாசல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2020-ஆம் ஆண்டு வெளி வந்தது.

இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். 120 நாளில் இப்படத்தை எடுத்து முடிக்க ப்ளான் போட்டுள்ளாராம் இயக்குநர் வெற்றிமாறன். சமீபத்தில், பாலா இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

மிக விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகவிருக்கிறது. இதனை சூர்யா – ஜோதிகா இணைந்து தங்களது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர். சூர்யாவின் 41-வது படமான இதில் ஹீரோயினாக ‘உப்பெனா’ என்ற தெலுங்கு படம் மூலம் ஃபேமஸான க்ரித்தி ஷெட்டி நடிக்கிறாராம்.

இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வணங்கான்’ அல்லது ‘கடலாடி’ ஆகிய இரண்டு டைட்டில்களில் ஒன்றை வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.