இயக்குனர் ஹரிக்கு பிடித்த ஹீரோ யார் தெரியுமா ?

2002-ஆம் வெளியான தமிழ் படத்தை இயக்கி கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ஹரி . இதன் பிறகு சாமி , கோவில் , அருள் ,ஐயா , அருள், தாமிரபரணி , வேல் ,சிங்கம் , என பல படங்களை இயக்கியவர் ஹரி . இவர் நடிகர் சூர்யாவை வைத்து ஆறு , வேல் ,சிங்கம் , சிங்கம் 2 , சிங்கம் 3 என ஐந்து படங்கள் இயக்கி உள்ளார் . இந்த ஐந்து படங்களும் மிக பெரிய வெற்றிகளை குவித்தது .

இந்நிலையில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் ஹரி ஆறாவதாக ஒரு படம் இயக்க இருந்தார் ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த படம் தொடங்காமல் போனது . இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா ஜெய் பீம் படத்தில் நடித்தார். இயக்குனர் ஹரி நடிகர் அருண் விஜய்யை வைத்து படம் இயக்க தொடங்கினார் .

யானை என்ற தலைப்பை இந்த படத்திற்கு பெயர் வைத்தார் ஹரி. இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார் . ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, யோகி பாபு , ஆகியோர் இந்த படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் .இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் பேட்டி ஒன்றில் இயக்குனர் ஹரியிடம் தங்களுக்கு பிடித்த கதாநாயகன் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது அதற்கு மோகன் லால் தான் தனக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் என்று தெரிவித்துள்ளார் .

Share.