இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு நிச்சியதார்த்தம்

டிகர் கார்த்தி தற்பொழுது சர்தார் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் . பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்குகிறார் .இந்த படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் நடிகை லைலா நீண்ட வருடங்களுக்கு இந்த படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து கொண்டு இருக்கிறார் அதில் ஒன்றில் வயதான தோற்றத்தில் நடிக்கிறார் . இந்த படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடந்தது. இதில் சங்கி பாண்டே சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதுவரை படப்பிடிப்பு நடக்காத அசர்பைசான் பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஜார்ஜியாவிலும் படப்பிடிப்பு நடந்தது. இந்த இரு இடங்களில் நடைபெற்ற காட்சிகளுக்காக மட்டுமே ரூ.4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது .

இந்நிலையில் சர்தார் படத்தின் படத்தின் இயக்குனர் மித்ரன் அவர்களுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் ஆகி உள்ளது . இயக்குனர் பி.எஸ்.மித்ரனின் நண்பர்கள் மற்றும் பல சினிமா நட்சத்திரங்கள் அவருக்கு இணையத்தில் வாழ்த்து கூறி வருகின்றனர் .மேலும் திருமண நிச்சியத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது .

Share.