ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தின் கதை இது தான் !

பாகுபலி படம் மூலம் இந்திய முழுவதும் அறியப்பட்ட இயக்குனராக இருக்கிறார் ராஜமௌலி . பாகுபலி -1 மற்றும் பாகுபலி -2 ஆகிய படங்களின் வெற்றிலை பிறகு ராஜமௌலி இயக்கிய படம்
“ரத்தம் ரணம் ரௌத்திரம் ” . இந்த படத்தில் ராம் சரண் , ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர் . மேலும் சமுத்திரக்கனி , ஆலியா பட் , அஜய் தேவ்கான் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் .இந்த படம் இந்திய முழுக்க மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது .

இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்குகிறார் ராஜமௌலி .இந்த படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது இந்த படம் . பெருமபாலான படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது . புதையல் வேட்டையை மையமாக வைத்து இந்த படத்தை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது .தென் ஆப்ரிக்காவில் உள்ள காட்டு பகுதிகளில் இந்த படப்பிடிப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

நடிகர் மகேஷ் பாபு தற்பொழுது இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் சர்கார் வாரி பாட்டா என்கிற படத்தில் நடித்து வருகிறார் . இதனை தொடர்ந்து இயக்குனர் திருவிக்கம் சீனிவாசன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் .

Share.